துறை பற்றி
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
- திருவள்ளுவர்
நம் கல்லூரி 1998ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது அன்றிலிருந்தே தமிழ்துறையும் சிறப்பாக இயங்கி வருகிறது. தனியாக ‘தமிழ்த்துறை’ என்று இல்லாமல் அனைத்துப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் பகுதி – 1 (Part-1) தமிழ்’ என்ற பாடத்திட்டத்தில் இயங்கி வருகின்றது. பல்கலைக்கழக மதிப்பெண் பட்டியல் தரவரிசையில் எம்மாணவிகள் முதல் தரம்இ இரண்டாம் தரம்இ என்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் எம்மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சிஅடைந்துள்ளனர் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கின்றோம்.
ஆசிரியர் சுயவிவரம்
வரிசை எண் | ஊழியர்களின் பெயர் | பதவி | தகுதி | சேர்ந்த தேதி |
1 | டாக்டர் கே.ஜி. உமா மகேஸ்வரி | துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர் | M.A., B.Ed., M.Phil., Ph.D., | 03.08.1999 |
2 | டாக்டர் ஜி.என்.டி. ராணி காஞ்சனா | உதவிப் பேராசிரியர் | M.A., M.Phil., Ph.D | 28.06.2001 |
துறைசார் நடவடிக்கைகள்
தமிழ்த்துறையில் ‘மணிமேகலை தமிழ் மன்றம்’ என்ற அமைப்பினை நடத்தி அதில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் நிறைய போட்டிகள் நடத்தி உள்ளோம். மேலும் பல பேச்சாளர்களையும் பேராசிரியர்களையும் அழைத்து கருத்தரங்கக் கூட்டங்கள் நடத்தியுள்ளோம். பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடிவினா, வண்ணக்கோலங்கள், பாடத்திட்டத்துடன் தொர்புடைய மேடை நாடகங்கள், நடனப்போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி பெருமை படுத்தியுள்ளோம். இவ்விதமான நிகழ்ச்சிகள் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்த்தி வருகின்றோம். இவை தவிர மற்ற கல்லூரிகளில் நடத்துகின்ற போட்டிகளில் எம்மாணவிகள் பங்கேற்று நிறைய பரிசுகளை வென்று உள்ளனர். எம் கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டும் தமிழில் புலமை வாய்ந்த அறிஞர்களை அழைத்து ‘மணிமேகலை தமிழ் மன்றம்’ சார்பாக நிறைய கருத்தரங்கங்களை நடத்தியுள்ளோம். தமிழ்த்துறையில் மாணவர்களை விழிப்புணர்வு தரும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பான TNPSC GROUP (I-IV) வரையான பாடத்திட்ட தரவுகள் தொகுத்துத்தரப்படுகிறது